ஈரோடு

Images

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று ஈரோடு. தொழில் நகரம் என்று பெயர்பெற்ற இந்த மாவட்டத்தில் விவசாயமும் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல், மஞ்சள், வாழை முக்கிய பயிர்களாக இருக்கின்றன. சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய அருகிலுள்ள மாவட்டங்களிலும் மரவள்ளிக் கிழங்கு, மா, சோளம், காய்கறிகள், கோழி, முட்டை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களும் 3, 4 மணி நேர பயண தூரத்தில் இருக்கிறது.

அனைத்து பகுதிகளிலும் இருந்து பேருந்து, ரயில் வசதி உள்ளது. காவிரி, நொய்யல், பவானி என்று மூன்று ஆறுகள் ஒடுகின்றன. புதிய விஷயங்களையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், அதுகுறித்தான தேடுதல் உள்ள விவசாயிகள் இந்த மாவட்டத்தில் உள்ளனர். இதோடு தமிழகத்தின் பல பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கும் இந்தப் பகுதி நன்றாகத் தெரியும். பல முன்னோடி விவசாயிகளும் வசிக்கும் பகுதியும் கூட. நகரத்தின் 1 மணி நேர பயண தூரத்தில் இந்தியாவின் முதன்மையான வேளாண் பல்கலைக்கழங்களுள் ஒன்றான தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் உள்ளது. தமிழ்நாட்டில் பல அமைப்புகள் வேளாண் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் பசுமை விகடன் தனித்ததொரு முயற்சியோடு களத்தில் இறங்குகிறது. பாரம்பர்யம் மற்றும் நவீனம் இரண்டும் கலந்ததாக கண்காட்சி இருக்கும். இதோடு மற்ற கண்காட்சிகளை விட விவசாயிகள், பார்வையாளர்கள் ஆகியோரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

விவசாயத்தில் நடைமுறைத் தொழில்நுட்பங்கள், இன்னும் பார்வைக்கு வராத பல கருவிகள், மகசூலைப் பெருக்கும் எளிமையான கருவிகள், கால்நடை வளர்ப்புக்கு தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், மதிப்புக் கூட்டும் கருவிகள் என்று பல விஷயங்கள் இருக்கும்.