சுற்றுலா பகுதிகள்

மலைக்கோட்டை, உச்சிப் பிள்ளையார் கோயில்: திருச்சி, மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது இந்த பிள்ளையார் கோயில். கோயிலின் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏறி வர வேண்டும். 3 பில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த பாறை, 83 மீட்டர் உயரமுடையது. இந்த பாறையின் மீதுதான் கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. உச்சியில், அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது.

Images

திருவரங்கம், அரங்கநாத சுவாமி கோயில்: 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம் ஶ்ரீரங்கம். 10 கி.மீ. தொலைவில் ட 156 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது இந்த கோயில் வளாகம். கோயிலின் ராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக இருந்து வருகிறது. காவிரி ஆற்றினால் சூழப்பட்ட ஶ்ரீரங்கம் தீவு போன்று காட்சியளிக்கிறது. கோயிலானது ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது. ஸ்ரீரங்க நகரமானது 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரமாக இருந்து வருகிறது. இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 25 ஆண்டுகளுக்கு முன்புதான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோயில்: திருச்சி மாநகருக்கு அருகே அமைந்துள்ளது 8 கி.மீ. இந்த ஜம்புகேஸ்வரர் சிவன் கோவில். இதை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடப் பெற்ற தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

முக்கொம்பு: திருச்சியில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முக்கொம்பு. காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும் பகுதியான முக்கொம்புவை அடையலாம். ஆற்றின் ஓரத்தில் பூங்காக்களும், சிறுவர்கள் விளையாடக்கூடிய தோட்டங்கள், படகு சவாரி என குடும்பத்தோடு செலவிடக் கூடிய இடமாக இருந்து வருகிறது முக்கொம்பு. திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து சென்று முக் கொம்புவை அடையலாம்.

கல்லணை: இந்தியாவின் பழமை வாய்ந்த அணைகளுள் 14 கி.மீ. கல்லணைக்கு முதலிடம் உண்டு. இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி, முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆறுகளாக பிரிந்து செல்கிறது.

வயலூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: இது திருச்சியிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்பு பெற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது.

Images

ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (அருங்காட்சியகம்): கி.பி. 1700-ல் நாயக்கர் ஆட்சியின் அரசியான ராணி மங்கம்மாவால் திருச்சியில் கட்டப்பட்டது. மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666-ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இது திருச்சி மலைக்கோட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான இடமாக செயல்பட்டது. 1999-ம் ஆண்டிலிருந்து அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது இதில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது.

சமயபுரம், மாரியம்மன் கோயில்: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது மாரியம்மன் திருத்தலம். திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள, இந்த கோயில் சக்தி வாய்ந்த மாரியம்மன் என்று மக்களால் போற்றப்படுகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை புரிகின்றனர். இந்த கோயிலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது.

புளியஞ்சோலை: கொல்லிமலையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது இந்த சுற்றுலா தளம். திருச்சியிலிருந்து 72 கி.மீ. தொலைவில் துறையூர் வழியாக, இந்த பகுதிக்கு செல்ல வேண்டும். பசுமையான மலைகள், புளிய மரங்கள் நிறைந்த பகுதி. அழகு நிறைந்த மலைப்பகுதி என்ற பெயரில் சுற்றுலாவாசிகளால் அழைக்கப்படுகிறது.

புனித லூர்து தேவாலயம்: திருச்சி, கோட்டை வாசலில் அமைந்துள்ளது பழமையான புனித லூர்து ஆலயம். 1812ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், வடிவமைப்பாலும், கட்டடத்தின் அமைப்பாலும் பேசப்படுகிறது. மிகவும் உயரமான இந்த ஆலயம், நகரின் மத்திய பகுதியில் அமைந்து அனைவருக்கும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.