சென்னையிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து 82 கி.மீ. தொலைவு. கோயம்புத்தூரில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் உண்டு.
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. நமது வசதிக்கேற்ப 250 தொடங்கி 2,000 ரூபாய் வரை நாள் வாடகையில் அறைகள் கிடைக்கும். அறைகள் பதிவு செய்வோர் தகுந்த அடையாள ஆவணங்களுடன் செல்லவேண்டும். உணவு பொருட்களும் தகுந்த விலையில், தரமாகவும் கிடைக்கும். சிறு கடைகள், ஹோட்டல்கள் முதல் மூன்று அடுக்கு நட்சத்திர உணவு விடுதிகளும் உண்டு. போக்குவரத்து நெரிசல் இல்லாத, அமைதியான ஊராகவும் இருக்கிறது ஈரோடு.