போக்குவரத்து

Images

திருச்சி, தமிழகத்தின் மையப்பகுதி. தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் சென்றுவர திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து 360 கி.மீ. தொலைவில் இருக்கும் சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல திருச்சியில் இருந்து மதுரை 130 கிலோமீட்டர். திருச்சி-நாகப்பட்டினம் 160 கிலோமீட்டர். கோயம்புத்தூர் 160 கி.மீ., சேலம் 140 கி.மீ., கன்னியாகுமரி 400 கி.மீ. கொடைக்கானல் 198 கி.மீ. தொலைவில் ஊர்களுக்கும் பேருந்து வசதி உள்ளது. இதைத்தவிர திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, வேளாங்கன்னி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

திருச்சியில் இருந்து சென்னை செல்ல தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 6-8 மணிநேரத்திற்குள் சென்னையை வந்தடையலாம். மைசூரு, திருவனந்தபுரம், திருப்பதி, எர்ணாகுளம், மங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய ஊர்களுக்கு ரயில் வசதிகள் உண்டு.

மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, குவைத், துபாய், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் சென்றுவர விமான சேவைகள் உள்ளன.